இரட்டையர் மரணம்: தந்தை மீது இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் ஆஜர்

greenridge-crescent-playground-father-crime-scene
Lianhe Zaobao Facebook

அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கால்வாயில் இறந்து கிடந்த 11 வயது இரட்டை ஆண் சிறுவர்களின் தந்தை மீது இன்று வெள்ளிக்கிழமை காலை (பிப். 18) இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கிரீன்ரிட்ஜ் கிரசண்ட் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மூடப்பட்ட கால்வாயில், ஜனவரி 21 அன்று மாலை 4.23 மணி முதல் 6.18 மணிக்குள் ஆஸ்டன் யாப் காய் ஷெர்னைக் (Aston Yap Kai Shern) கொலை செய்ததாக 48 வயதான சேவியர் யாப் ஜங் ஹவுன் என்ற அவரின் தந்தை மீது இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கத்தியுடன் போலீசாரை நோக்கி ஓடிவந்த ஆடவர்… சுட்டுப்பிடித்த போலீஸ் – திக் திக் வீடியோ!

இரட்டையர்களில் மற்றொருவரான ஈதன் யாப் இ செர்னைக் (Ethan Yap E Chern) கொலை செய்ததற்காக சிங்கப்பூரர் மீதான முதல் குற்றச்சாட்டில் இன்று திருத்தம் செய்யப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நேரம் மாலை 4.23 முதல் 6.18 மணிக்குள் என மாற்றப்பட்டது.

சேவியர் யாப் மீதான முதல் குற்றச்சாட்டு கடந்த ஜனவரி 24 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சேவியர் யாப் மரண தண்டனையை எதிர்கொள்வார்.

மேலும் விவரம் அறிய: தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

இதையும் படிங்க: இரட்டையர் மரணம்: பலத்த பாதுகாப்புடன் தந்தையை சம்பவ இடத்திற்க்கு அழைத்து சென்ற போலீசார் – வீடியோ