பிரபல சமூகவலைதளமான ட்விட்டர் செயலியின் லோகோவை (Twitter Logo) அதன் நிறுவனர் எலான் மஸ்க், திடீரென மாற்றியது பயனாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் கோழி முட்டைகள்!
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். அதன்படி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எனப்படும் ப்ளூ டிக் (Blue Tick) கொண்ட கணக்குகளுக்கு மாதம் மற்றும் வருடாந்திரக் கட்டணத்தை அறிவித்து, அமல்படுத்தியுள்ளார்.
அதேபோல், தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ப்ளூ நிறத்திலும், தனியார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு கோல்டு நிறத்திலும், அரசு சார்ந்த அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு பழுப்பு நிறத்திலும் டிக் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சித்திரை விழாவையொட்டி, சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ‘தமிழும் இசையும்’ நிகழ்ச்சி!
இந்த நிலையில், ட்விட்டர் செயலியின் அடையாளமாக கருதப்படும், நீலப்பறவை மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனு (Shiba Inu) லோகோ வைக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக, இந்த நாயின் உருவப்படம் உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவாக, குருவி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவதால், அடுத்து அவர் என்ன செய்ய போகிறார்? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.