சிங்கப்பூரில் விதிமுறை கடுமையாக்கப்பட்ட முதல் நாளே பிடிபட்ட இருவர்..!

Two caught riding e-scooters on footpaths in first day of stricter enforcement (Photo : LTA)

Two caught riding e-scooters on footpaths : சிங்கப்பூரில் புத்தாண்டு முதல், இ-ஸ்கூட்டர்களில் நடைபாதையில் சவாரி செய்யும் குற்றத்திற்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு பேர் இந்த வருடத்தின் முதல் நாளன்று இ-ஸ்கூட்டர்களில் நடைபாதையில் சவாரி செய்துள்ளனர், இந்த இருவரும் யிஷூன் மற்றும் செங்காங்கில் பிடிபட்டதாக புதன்கிழமை (ஜனவரி 1) முகநூல் பதிவில் தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கடந்த 2019ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான சிறந்த 10 நகரங்கள்..!

இது “கடுமையான அமலாக்க நடவடிக்கையின்” ஒரு பகுதியாகும் என்று LTA குறிப்பிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை ஆங் மோ கியோ, புங்க்கோல் மற்றும் செம்பவாங் போன்ற பகுதிகளில், அமலாக்க அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

நடைபாதைகளில் மின்ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு LTA கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்திருந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூர், இந்தியா உட்பட 6 நாடுகள் பங்குபெற்ற சர்வதேச கராத்தே போட்டி..!

இருப்பினும், தவறான ஓட்டுனர்களுக்கு இரண்டு மாத காலம் “ஆலோசனைக் கூறும் காலத்தின்” ஒரு பகுதியாக முன் எச்சரிக்கை வழங்கப்பட்டது.

இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், நடைபாதையில் சவாரி செய்வோருக்கு S$2,000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.