கடந்த 2019ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான சிறந்த 10 நகரங்கள்..!

Singapore had 14.67 million visitors.

Most Popular Cities : ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த டாப் 10 நகரங்களை மாஸ்டர் கார்டு என்ற நிறுவனம் ஆய்வு செய்து வெளியிடும்.

அதன் அடிப்படையில், 200 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, நகரங்களின் தனித்தன்மை மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் குற்றவியல் சட்ட மாற்றங்கள்..!

இதில் ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. சுமார் 14.67 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்தள்ளனர் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

முதல் மூன்று இடம்:

1. தாய்லாந்து, பாங்காக் :

உலகின் மிகவும் பிரபலமான நகரங்களில் பாங்காக் முதன்மையாக உள்ளது. சுமார் 22.78 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து 4 வருடங்களாக பாங்காக் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2. பிரான்ஸ், பாரிஸ் :

இரண்டாவது இடத்தில் பாரிஸ் உள்ளது, இங்கு 19.10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

3. பிரிட்டன், லண்டன்:

லண்டன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது, சுமார் 19.09 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகையிலை பொருட்களுக்கு புதிய விதிமுறை..!

அதைத்தொடர்ந்து…

4. ஐக்கிய அரபு நாடு, துபாய்

5. சிங்கப்பூர் 

6. மலேசியா, கோலாலம்பூர்

7. அமெரிக்கா, நியூயார்க்

8. துருக்கி, இஸ்தான்புல்

9. ஜப்பான், டோக்கியா

10. துருக்கி, அன்டால்யா