பாதுகாப்பு நடைமுறையை மீறிய 2 இந்திய வம்சாவளி ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

சிங்கப்பூரில் இரண்டு இந்திய ஆடவர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழு மீது COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக மார்ச் 1 அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற புத்தாண்டு கூட்டத்தின் போது COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

இதில் அதீஷ் அசுதோஷ் ராவ் மற்றும் சியாமா குமார் ஷரத் ஆகிய இருவரும் தலா இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்கின்றனர்.

அவை, பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறியது மற்றும் முறையாக முகக்கவசம் அணியாதது ஆகியவை என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் கிளார்க் கீயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடியது, 1 மீட்டர் கட்டாய சமூக இடைவெளியை கடைபிடிக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

சரத் ​​மற்றும் ராவ் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்றும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!