ஒவ்வொருவருக்கும் இரண்டு வேலைவைப்புகளா ! – வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தால் வேலை உறுதிதான்.

singapore jobs
(Photo: Economic Times)

சிங்கப்பூரில் தொழிலாளர் சந்தை தொடர்ந்து இறுக்கமாகவே இருந்தது.இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வேலை வாய்ப்புகள் புதிய உச்சத்தை தொட்டன.நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருவதால் தேவையான பணியாளர்களை சேர்த்து வருகின்றன.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 128,100 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின.கடந்த டிசம்பரில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 117100 ஆக இருந்ததாக மனிதவள அமைச்சகம் நேற்று தொழிலாளர் சந்தை அறிக்கையை வெளியிட்ட போது தெரிவித்தது.

சிங்கப்பூரில் வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்து ,வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சகம் குறிப்பிடுகிறது.கடந்த 1998-க்குப் பிறகு இதுதான் உச்ச நிலை என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.அந்த வேலைகள் மேலாளர்கள்,நிர்வாகிகள்,மற்றும் தொழில்நுட்ப அதிபர்கள் போன்ற உயர்மட்ட பதவிகள் அல்லாத வேலைகள் ஆகும்.அவற்றை வெளிநாட்டு தொழிலாளர்களே வழிவழியாக செய்து வருகிறார்கள்.

சிங்கப்பூர்வாசிகள் அல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலைகளை நிறுவனத்தின் முதலாளிகள் அதிகளவில் நிரப்பியுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.