சிங்கப்பூரில் தீ விபத்தின்போது துணிச்சலுடன் செயல்பட்ட ஊழியர் ஷாம்குமார் உட்பட இருவருக்கு SCDF விருது.!

Pic: SCDF

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தீயை அணைக்க துணிச்சலுடன் செயல்பட்ட 2 பேருக்கு நான்காம் பிரிவு விருது வழங்கி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கௌரவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி, ஜூரோங் ஈஸ்ட்டில் கூட்டுரிமை வீட்டின் 14வது தளத்திலுள்ள ஒரு வீட்டின் சமையலறையில் திடீரென ஏற்பட்ட தீயை, அண்டை வீட்டுக்காரரான கத்ரானி பிட்டன் (48) உடனடியாக கட்டடத்தில் உள்ள தீயணைப்புக் கருவியின் உதவியுடன் தீயை அணைத்தார்.

“அதிகாலையில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்யும்”- சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

அதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ஜூரோங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள J Gateway கூட்டுரிமை வீடுகளின் பாதுகாப்பு கண்காணிப்பாளரான ஷாம்குமார் கெண்டராஜன் (36) பணியில் இருந்தபோது தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.

பின்னர், உடனடியாக 9வது மாடியில் புகையைப் பார்த்த அவர், படிகளின் வழியாக விரைந்து சென்று குடியிருப்பாளர்கள் இருவரின் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார். இந்த இரு நபர்களையும் SCDF அதிகாரிகள் பாராட்டினார்.

தீயணைப்பு போன்ற உயிர்காக்கும் திறன்களைக் பொதுமக்கள் கற்றுக்கொள்ளுதல் நல்லது என்றும், அவசர காலத்தில் முன்வந்து உதவ அது உதவியாக இருக்கும் என்றும் SCDF தளபதியான கர்னல் கோ பூன் ஹான் குறிப்பிட்டார்.

திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ!