நவ.16- ஆம் தேதி சிங்கப்பூர் வருகிறார் அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர்!

Photo: U.S. Secretary of Commerce Official Twitter Page

அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலாளர் ஜினா ரைமொண்டோ (U.S. Secretary of Commerce Gina Raimondo), இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வருகிறார்.

நியூசிலாந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு!

இது தொடர்பாக அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்காவின் வர்த்தகத்துறையின் செயலாளர் ஜினா ரைமொண்டோ (US Secretary of Commerce Gina Raimondo), நவம்பர் 15- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணம் இதுவாகும்.

நவம்பர் 15- ஆம் தேதி அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு செல்கிறார். பின்னர், நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர், நவம்பர் 18- ஆம் தேதி அன்று மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களை அமெரிக்க வர்த்தகத்துறையின் செயலாளர் சந்திக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் சூழல், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், டிஜிட்டல் பொருளாதாரம், தொழில்நுட்பம், பிராந்திய உள்கட்டமைப்பு திட்டங்கள், அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.

சிங்கப்பூர் கடல்சார் துறையில் வேலை வாய்ப்பு!!!

குறிப்பாக, நவம்பர் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வரும் அமெரிக்க வர்த்தகத்துறையின் செயலாளர் ஜினா ரைமொண்டோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்- அமெரிக்கா இடையே பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.