“உக்ரைனுக்கு ஆம்புலன்ஸுகள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

ஷங்ரிலா கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டிமிட்ரோ செனிக் (Deputy Foreign Minister of Ukraine Dmytro Senik) நேற்று (10/06/2022) மதியம் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார்.

ICAஆல் கூறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ICA கட்டிடத்தில் உள்நுழைய அனுமதி

அப்போது, இருவரும் உக்ரைனில் நீடிக்கும் போர் நிலவரம் குறித்து பேசினர். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றித் தெரிவித்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர், உக்ரைன் வருமாறும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உக்ரைன் நாட்டின் வேண்டுகோளையேற்று, சிங்கப்பூர் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒன்பது ஆம்புலன்ஸுகள், இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள், அத்துடன் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், கண்ணிவெடி கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை உள்ளடக்கிய மனிதாபிமான உதவித் தொகுப்பை வழங்கும்.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் 4 இடங்களுக்குச் செல்ல விசிட் பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா !!

உக்ரைனில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் தேவைகளைச் சமாளிக்க சர்வதேச நாடுகள் உதவி வரும் நிலையில், உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து இந்த உதவித் தொகுப்பை வழங்கவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.