சிங்கப்பூரில் இரண்டாவது கடையைத் திறந்த பிரபல ‘Um Yong Baek’ உணவகம்!

சிங்கப்பூரில் இரண்டாவது கடையைத் திறந்த பிரபல 'Um Yong Baek' உணவகம்!
Photo: Mothership

 

பிரபல கொரிய உணவகமான ‘Um Yong Baek’, கடந்த 2022- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள 27 பூன் டேட் ஸ்ட்ரீட்டில் (27 Boon Tat St) முதல் கடையைத் திறந்தது. இந்த கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. டிசம்பர் 14- ஆம் தேதி மாலை 04.55 மணி நிலவரப்படி, இந்த கடையில் ஒரு டேபிளுக்கு சுமார் 10 பேர் உணவருந்துவதற்காகக் காத்திருந்ததாக உணவகம் குறிப்பிட்டுள்ளது.

‘தைப்பூசத் திருவிழா- 2024’- பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், முதல் கடைக்கு சிறிது தூரத்தில் இரண்டாவது கடையை ‘Um Yong Baek’ உணவகம் இன்று (டிச.15) திறந்துள்ளது. இந்த இரண்டாவது கடை, 80 டெலோக் ஐயர் ஸ்ட்ரீட்டில் (80 Telok Ayer Street) அமைந்துள்ளது. இந்த கடை வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை திறந்திருக்கும். காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரையும், மாலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் செயல்படும்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் இணைந்து நடத்தும் ‘தைப்பூசத் திருவிழா 2024’!

இந்த உணவகத்தில் பன்றி இறைச்சி, மீன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளும், நூடுல்ஸ், சூப் போன்றவையும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.