ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் இணைந்து நடத்தும் ‘தைப்பூசத் திருவிழா 2024’!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

 

வரும் ஜனவரி 25- ஆம் தேதி அன்று தைப்பூசத் திருவிழா சிங்கப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. ‘தைப்பூசத் திருவிழா 2024’ தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25- ஆம் தேதி அன்று தைப்பூசம் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் இணைந்து ‘தைப்பூசத் திருவிழா 2024’-ஐ நடத்துகின்றன.

கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்

ஜனவரி 24- ஆம் தேதி அன்று அதிகாலை 05.00 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் இருந்து முருகப் பெருமானின் வெள்ளி ரத ஊர்வலம் தொடங்குகிறது. அதேபோல், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில், ஜனவரி 25- ஆம் தேதி நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை பக்தர்களுக்காக அன்னதானம் நடைபெறும்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இடம் பாற்றாக்குறைக் காரணமாகவும், அதிகக் கூட்டம் இருப்பதாலும் தைப்பூசத் தினத்தன்று முதல் நாள், அதாவது ஜனவரி 24- ஆம் தேதி அன்று இரவு பால்குடம் எடுக்கும் பக்தர்கள் பக்தர்கள் தங்களது பால்குடங்களை வீட்டிலேயே தயார் செய்து எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் COVID-19 தொற்று…”எதையும் கையாள தயார்”

பால் காவடி, தொட்டில் காவடி, அலகு மற்றும் ரதக் காவடி ஆகியவைக்கு www.thaipusam.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு என்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.