சிங்கப்பூரில் அதிகரிக்கும் COVID-19 தொற்று…”எதையும் கையாள தயார்”

சிங்கப்பூர் தற்போதைய COVID-19 நோய்ப்பரவலை இலகுவாக கையாள முடியும் என சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் புதன்கிழமை (டிசம்பர் 13) தெரிவித்தார்.

ஆனால், மக்கள் தொடர்ந்து தங்கள் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்

சிங்கப்பூரில் சமீப வாரங்களாக COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதாக MOH கூறியுள்ளது.

கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை, பாதிப்பு எண்ணிக்கை 32,035 ஆக உயர்ந்துள்ளது என்றும், அதற்கு முந்தைய வாரத்தில் 22,094 பாதிப்புகள் பதிவாகி இருந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அதே போல மருத்துவமனைகள் மற்றும் ICU வில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் சராசரி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

நேற்று புதன் நிலவரப்படி, தற்போது 560 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 க்கும் குறைவான நபர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) COVID-19 இருப்பதாகவும் திரு ஓங் கூறினார்.

இருப்பினும், தொற்றுநோய் காலகட்டத்தில் இருந்தது போல பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இல்லை என்று அமைச்சகம் கூறியது.

“நீங்க இந்தியர்… நீங்க மிக மோச**வர்கள்” என்று கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு அபராதம்

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000