‘பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயரம்’- சிங்கப்பூரில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை!

Man who was shot by police in Balestier raid
Man who was shot by police in Balestier raid

 

இந்திய நாட்டைச் சேர்ந்த சின்னய்யா என்ற 26 வயது இளைஞர், சிங்கப்பூரில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019- ஆம் ஆண்டு மே மாதம் 04- ஆம் தேதி பணியை முடித்து விட்டு, இரவு சாலையில் நடந்துச் சென்ற பல்கலைக்கழக மாணவியை வலுக்கட்டாயமாக, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளார்.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

மாணவியின் முகமெல்லாம் காயங்களும், சிராய்ப்புகளும், கீறல்களும் இருந்த நிலையில், காதலனால் மீட்கப்பட்ட அந்த பெண், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சின்னய்யாவைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், சின்னய்யாவின் மனநிலையைப் பரிசோதிக்க பல சுற்று உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, மாணவி சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், சின்னய்யாவுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படியும் வழங்க கோரிக்கை முன் வைத்தார்.

ஜூரோங் ஈஸ்ட் அருள்மிகு முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்!

இதனையேற்றுக் கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், சின்னய்யாவுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படியும் தண்டனையாக வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.