ஜூரோங் ஈஸ்ட் அருள்மிகு முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்!

ஜூரோங் ஈஸ்ட் அருள்மிகு முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்!
File Photo

 

சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு முருகன் கோயில். இந்த கோயில் மிகவும் பழமையானது மற்றும் பிரசித்திப் பெற்றது. இந்த நிலையில், இந்த கோயிலில் அக்டோபர் 27- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 08.35 மணியளவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ‘ஓம் முருகா, ஓம் முருகா’ என்று பக்தர்கள் கோஷமிட, கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?

அதைத் தொடர்ந்து, கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வை காணும் வகையில், கோயிலுக்கு வெளியே பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

நொவீனா ரயில் நிலையம் திடீர் மூடல் – ரயில் பயணிகளுக்கு ஆலோசனை

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம், மிகச் சிறப்பாகச் செய்திருந்தது. கும்பாபிஷேக விழாவில், சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.