சிங்கப்பூரில் உரிமம் பெறாமல் இறைச்சி, கடல் உணவுகளை சேமித்த நிறுவனத்துக்கு S$22,500 அபராதம்

unlicensed cold store fined
SFA

சிங்கப்பூரில் உரிமம் பெற்ற உணவு இறக்குமதி நிறுவனமான Fish Net Pte Ltd, உரிமம் பெறாமல் Cold store செய்ததால் நிறுவனத்துக்கு S$22,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அதிகாரிகள் The Fish Net Pte Ltd நிறுவனத்தை ஆய்வு செய்ததில், சுமார் 1,100 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Work pass ஊழியர்கள் அல்லது குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க யோசிக்கும் நிறுவனங்கள்!

அந்த நிறுவனத்துக்கு அதன் வளாகத்தில் Cold store செய்து பொருட்களை சேமித்து வைக்க உரிமம் இல்லை.

அதன் பின்னர் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் SFA பறிமுதல் செய்தது.

“உரிமம் இல்லாத இடங்களில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சட்டவிரோதமாக சேமிப்பது உணவு பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று SFA கூறியது.

விற்பனை அல்லது விநியோக நோக்கத்திற்காக உரிமம் பெறாமல் Cold store செய்து ஏதேனும் இறைச்சி அல்லது கடல் உணவுப் பொருட்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், S$50,000 வரை அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

இரண்டாவது அல்லது தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டால், S$100,000 வரை அபராதம் மற்றும்/அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இறுதியாக அனுமதி – மகிழ்ச்சி