தடுப்பூசி போடவில்லை என்றால் ஊழியர்கள் பணியிடத்திற்கு செல்ல முடியாது!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் வரும் ஜன. 15, 2022 முதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் பணியிடத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்களின் நிகழ்வுக்கு முந்தைய சோதனை (PET) முடிவு “நெகடிவ்” என இருந்தாலும், ஊழியர்கள் பணியிடத்திற்குத் திரும்ப முடியாது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை

PET சலுகையை நீக்கியதன் மூலம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே இனி பணியிடத்திற்குத் திரும்ப அனுமதி வழங்கப்படும்.

நேற்று டிசம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொள்ள ஜன. 31, 2022 வரை அவகாசம் வழங்கப்படும் என்று MOH கூறியது.

இந்த கால கட்டத்தில், இந்த முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் PET சலுகையைப் பயன்படுத்தி பணியிடத்திற்குள் செல்ல முடியும், அவர்கள் கண்டிப்பாக “நெகட்டிவ்” PET சோதனை முடிவை காட்ட வேண்டும்.

இந்த மாற்றம், “தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்கவும் உதவும்” என்று MOH கூறியது.

திருச்சி-சிங்கப்பூர் இடையே தினசரி இண்டிகோ விமான சேவை!