சிங்கப்பூரில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாமல் இருக்கும் சுமார் 48,000 ஊழியர்கள்

(photo: mothership)

கோவிட்-19 தடுப்பூசி அறவே போட்டுக்கொள்ளாத சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கை டிசம்பரில் சுமார் 52,000ஆக இருந்தது.

தற்போது, கடந்த ஜனவரி 2ஆம் தேதி நிலவரப்படி, அது 48,000 ஆகக் குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் திரு. டான் சீ லெங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பயணிகளுக்கான சோதனை முறை கடுமை: VTL விமான பயணிகளுக்கும் கடும் சோதனை

தடுப்பூசி போடாத ஊழியர்களில் 30 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து 40 முதல் 49 வயது வரை உள்ளவர்கள் 27 சதவீதம் பேர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

MOM

அவர்கள் செய்யும் வேலை வகை மற்றும் கர்ப்பமாக இருக்கும் தடுப்பூசி போடப்படாத ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த புள்ளிவிவரத்தை MOM வழங்கவில்லை.

தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து வந்தவரை வளைத்து பிடித்த போலீசார்