தடுப்பூசி போடாமல் உணவகத்தில் இருந்த ஆடவர்… விசாரித்த அதிகாரிகளுக்கு “குத்து” – கைது செய்த போலீஸ்

Unsplash

அரசாங்க ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக 53 வயது ஆடவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று இரவு 8 மணியளவில், ரெட்ஹில் ஃபுட் சென்டரில் நடந்த சண்டை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

லேப்டாப் வாங்க வசதியில்லா வெளிநாட்டு ஊழியர்: நன்கொடை செய்த IRR அமைப்பு… இரட்டை சம்பளத்தில் வேலை பெற்று அசத்தல்

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பை (NEA) சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உணவு நிலையத்தில் சோதனைகளை மேற்கொண்டனர், அப்போது அந்த ஆடவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து விசாரித்தபோது, ​​​​அந்த ஆடவர் ஆத்திரத்தில் இரண்டு NEA அதிகாரிகளையும் குத்தியதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து, உதவி வேண்டி போலீசார் அங்கு அழைக்கப்பட்டனர், அதன் பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இன்று ஜன. 14ம் தேதி, அரசாங்க ஊழியரைத் தன் கடமையைச் செய்யவிடாமல், தானாக முன்வந்து காயப்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது நீதிமன்றத்தில் சுமத்தப்படும்.

இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 12வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர்: “விழுந்தால் என்ன ஆவது”- நெட்டிசன்கள் கவலை