UOB, OCBC வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Photo: Wikipedia

 

சிங்கப்பூரில் உள்ள யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி (United Overseas Bank- ‘UOB’) மற்றும் ஓசிபிசி வங்கி (OCBC Bank) ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி இந்தோனேசியா நாட்டிற்கு செல்லும் போது, அங்குள்ள அனைத்து கடைகளிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என நேற்று (நவ.17) நடைபெற்ற சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்பத் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது!

இந்தோனேசியா உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் QR Code (அல்லது) QRIS Code ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் தொலைபேசியில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலியைத் திறந்து, அந்த Code-ஐ ஸ்கேன் செய்து பணத்தை எளிதாக அனுப்பலாம்.

இந்த வசதியை DBS வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தபபடவுள்ளது. அதேபோல், சிங்கப்பூரின் பேநவ் மற்றும் மலேசியாவின் டூயிட்நவ் சேவை இணைப்பு மூலம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா வங்கிக் கணக்குகளுக்கு இடையே எளிதில் பணப்பரிமாற்றம் செய்வதையும் சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

“பிளாஸ்டிக் பையில் கடல் உயிரினம்” – இரவு நேரத்தில் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் – விருதை தட்டி தூக்கிய சிங்கப்பூரர்

இந்த புதிய வசதியால் UOB, OCBC வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.