திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய பயணி… அமெரிக்க டாலர்கள் பறிமுதல்!

சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியை விமான நிலையத்தில் மடக்கிய அதிகாரிகள்!
Photo: Trichy Customs

 

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான நிறுவனங்கள் இரு மார்க்கத்திலும் விமான சேவைகளை வழங்கி வருகின்றனர். அதேபோல், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் உள்நாட்டு விமான சேவையை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்… 39 வயதான ஆடவருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட் அதிரடி

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், போதைப்பொருளைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மண்டலத்தின் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது, பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை, ஆகஸ்ட் 04- ஆம் தேதி அன்று திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 39 வயதான அபூபக்கர் சித்திக் என்ற வைத்திருந்த கைப்பையில் பல லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

துவாஸில் விபத்து: 32 வயதுமிக்க ஆடவர் மரணம்

பின்னர் அந்த பயணியைத் தனியாக அழைத்துச் சென்ற அதிகாரிகள், கைப்பையில் இருந்த அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய் 14,74,200 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.