அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆலோசகர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரெக் சோலெட் (US State Department Counselor Derek Chollet), அக்டோபர் 20- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கொரோனா பாதிப்பு, தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், பிராந்தியங்களில் நிலவும் சூழல் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்துவதில் தடுமாற்றம்!

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரெக் சோலெட்டுடன் ஒரு நல்ல சந்திப்பை மேற்கொண்டேன். தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வந்துள்ளார்.

ஆசியானுடனான அதன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை வலுப்படுத்தும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நான் வரவேற்கிறேன். மியான்மர் உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். வரவிருக்கும் ஆசியான் உச்சிமாநாடு மற்றும் தொடர்புடைய உச்சிமாநாடுகளுக்கு மியான்மரில் இருந்து அரசியல் சார்பற்ற பிரதிநிதியை அழைக்க கடந்த வாரம் ஆசியானின் கடினமான, அவசியமான முடிவுக்கு அமெரிக்காவின் ஆதரவை ஆலோசகர் சோலட் மீண்டும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் மேலும் 16 பேர் உயிரிழப்பு!

மியான்மரில் மனிதாபிமான சூழ்நிலைக்கு சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த உதவி தேவைப்படும். மியான்மரில் உள்ள ஆசியான் சிறப்புத் தூதுவருடன் மியான்மர் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஐந்து அம்ச ஒருமித்தக் கருத்தை விரைவாக செயல்படுத்த ஒப்புக்கொண்டோம்.

நீண்டகால மற்றும் பலதரப்பட்ட சிங்கப்பூர்- அமெரிக்க உறவு மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆழமான பொருளாதார ஈடுபாடு பற்றியும் நாங்கள் நன்றாக உரையாடினோம்”. இவ்வாறு அமைச்சரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.