அமெரிக்காவின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சிங்கப்பூருக்கு வருகிறார்!

Photo: Wikipedia

அமெரிக்காவின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டேனியல் கிரிட்டன்பிரிங்க் (Assistant Secretary of State for East Asian and Pacific Affairs Daniel J. Kritenbrink) தென்கிழக்காசிய நாடுகளுக்கு (Southeast Asia) இன்று (27/11/2021) முதல் வரும் டிசம்பர் 4- ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக அவர் சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ளார்.

டிசம்பர் முதல் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கு இந்தியா அனுமதி – சிங்கப்பூருக்கு கட்டுப்பாடு

இது தொடர்பாக அமெரிக்கா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமெரிக்காவின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டேனியல் கிரிட்டன்பிரிங்க் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இன்று (27/11/2021) முதல் வரும் டிசம்பர் 4- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, அவர் ஒவ்வொரு நாட்டின் மூத்த அரசு அதிகாரிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

விபத்து: தலைகுப்புற கவிழ்ந்த கார் (காணொளி) – சிறுவன் உள்ளிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி

உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களைச் சமாளிக்க நமது கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல், அமெரிக்கா உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், பொருளாதாரம், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், கொரோனா பரவல் உள்ளிட்டவைக் குறித்து டேனியல் கிரிட்டன்பிரிங்க் ஆலோசிக்க உள்ளார்”. இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.