சிங்கப்பூர் அதிகாரிகளின் அதிரடி சோதனை: 56 வணிக நிறுவனங்கள், 177 நபர்கள் பிடிப்பட்டன

inspection
Singapore Police Force

கோவிட்-19 விதிமுறையை மீறிய உணவு மற்றும் பான கடைகள் சோதனையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளின் போது, இந்த பொது பொழுதுபோக்கு மற்றும் இரவு நேர கேளிக்கை நிலையங்கள், உணவு&பான கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜன. 1 முதல் சிங்கப்பூரில் இருந்து செல்ல முடியாது – தடை விதித்த நாடு

கோல்டன் மைல் வளாகத்தில் உள்ள மூன்று உணவு&பான (F&B) கடைகள், அதாவது Thong Lor, Angel Bar Beer மற்றும் CY Bistro ஆகியவை இதில் பிடிப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கை கடந்த டிசம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை, குற்றப் புலனாய்வுத் துறையின் இரகசியச் அமைப்பு மற்றும் ஏழு காவல்துறை நிலப் பிரிவுகள், பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம், 56 வணிக நிறுவனங்கள் மற்றும் 177 நபர்கள் இந்த நடவடிக்கைகளின் போது சோதனை செய்யப்பட்டனர்.

இரகசிய சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயதுடைய ஆடவர் ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டார்.

மது போதையில் பேருந்து ஓட்டுநர், போலீசிடம் ரகளை – இந்தியருக்கு சிறை