நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?

Changi Airport Facebook

தடுப்பூசி போடப்பட்ட நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் (Work Permit அனுமதி பெற்றவர்கள் தவிர) இனி சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதி (VTP) அல்லது நுழைவு அனுமதியைப் பெற வேண்டியதில்லை.

இருப்பினும், அவர்கள் நுழையும்போது எல்லை நடைமுறையில் உள்ள சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

Breaking: சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எளிமை!! – பிப்ரவரி 21 முதல் நடைமுறை!

VTL மற்றும் “வகை 1” கீழ் உள்ள பயணிகள் இனி சிங்கப்பூர் வரும்போது PCR சோதனையைச் மேற்கொள்ள வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக, சிங்கப்பூர் முழுவதும் அமைந்துள்ள சோதனை நிலையங்களில் ஒன்றில் Supervised self-swab என்னும் ART சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததிலிருந்து 24 மணிநேரத்துக்குள் அதனை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் மூடப்பட்ட 2,200 கட்டுமான நிறுவனங்கள் – வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?