குழந்தைகளுக்கு தடுப்பூசி: தனியாக முன்பதிவு செய்யாமல் உடன்பிறப்புகளுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்!

(photo: mothership)

கோவிட்-19 தடுப்பூசிக்கு முன்பதிவு செய்த குழந்தைகள் தற்போது தனியாக முன்பதிவு செய்யாமல் ஒரே நேரத்தில் தங்கள் உடன்பிறப்புகளுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

புதிய “sibling walk-in” ஏற்பாடு திங்கள் முதல் வியாழன் வரை குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலையங்களில் வரும் ஜனவரி 10 முதல் நடைமுறையில் இருக்கும்.

கோவை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம் – பயணிகள் மகிழ்ச்சி!

இந்த தடுப்பூசி குறித்த தகவல்களை கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்துள்ளது.

இது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அதிக வசதியை வழங்குவதாகவும் MOE தெரிவித்துள்ளது.

திங்கள் முதல் வியாழன் வரை வாரந்தோறும் செயல்படும் தடுப்பூசி ஏற்பாட்டை MOE பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஏற்பாட்டின்கீழ் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் திட்டமிடும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், இரவு 7 மணிக்குள் தடுப்பூசி நிலையத்திற்கு வர வேண்டும்.

பணத்தை காவலர்கள் திருடியதாக போலி நாடகம்: “வினேஷ் குமார் கணேசன்” என்பவருக்கு அபராதம், சிறை