உலகம் முழுவதும் பிப்.14 அன்று காதலர் தினமாக கொண்டாடப்படும். அதன்படி நாளை காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் மத்தியில் உற்சாகம் கலைக்கட்டியுள்ளது.
அந்நாளில் கிளப், பார்ட்டிகள் மேலும் கிப்ட்கள் என பல அணுகுமுறை உள்ளதால், அதனை நடத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு கல்லா கட்டிவிடும்.
காதலர் தின விளம்பரங்கள் பொதுவாக காதல் ஜோடிகளை இலக்காகக் கொண்டிருக்கும். ஆனால், சிங்கப்பூர் கிளப் ஒன்று வழக்கத்திற்கு மாறான காதலர் தின விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் நீக்கம்: முகக்கவசம் எங்கு அணிய வேண்டும்? எந்த ஊழியர்களுக்கு கட்டாயம்
உங்கள் மனைவியை அழைத்துவந்தால் மொத்த கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குவதாக அந்த கிளப் அறிவிப்பு செய்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது வெளியிட்ட விளம்பர போஸ்ட்டரில்: “இந்த கட்டண சலுகையை பெற உங்கள் மனைவியை உடன் அழைத்துச் வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனை சிறப்பான செயல் என பல்வேறு நெட்டிசன்கள் பாராட்டினர். இது விளம்பர யுக்தி என்றும் பலர் கூறினர்.
சிங்கப்பூரில் பிப்.13 முதல் நடப்புக்கு வந்துள்ள மாற்றங்கள் – கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்