வேன்- கனரக வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

Photo: SG Road/ Telegram

ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று பிற்பகல் 02.35 மணியளவில் சிங்கப்பூரில் துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் முன்னால் சென்ற கனரக வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (Singapore Civil Defence Force) மற்றும் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் உயிரிழப்பு….. இழப்பீட்டை வழங்கியது சுகாதாரத்துறை அமைச்சகம்!

இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், வேனை ஓட்டி வந்த 26 வயது ஓட்டுநர், வேனின் இருக்கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு எங் தெங் ஃபாங் பொது மருத்துவமனையில் (Ng Teng Fong General Hospital) அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிடும் சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனம்!

விபத்து குறித்த காணொளி ட்விட்டர், ஃபேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.