COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு காணொளி வெளியிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின்..!

Message from Sachin Tendulkar about COVID-19
Message from Sachin Tendulkar about COVID-19

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், வெளிநாட்டு ஊழியர்கள் அரசு கூறும் பாதுகாப்பான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Grateful to Sachin Tendulkar, the renowned and talented Indian cricketeer, for agreeing to do this COVID message. It will mean a lot to all fans of the sport, especially our foreign workers, to hear from their cricket idol. We are doing our utmost to take care of their health, livelihood and welfare. Meanwhile, I hope this message from Sachin will help to lift their morale and spirits in this circuit breaker period. Take Care and Stay Healthy. Together, we can and will overcome!

Posted by S Iswaran on Thursday, April 16, 2020

இந்த காணொளியை அமைச்சர் S. ஈஸ்வரன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலம், வாழ்வாதாரம் மற்றும் நலனைக் கவனித்துக்கொள்வதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று S. ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கிடையில், சச்சினின் இந்த செய்தி இந்த சர்க்யூட் பிரேக்கர் காலத்தில் அவர்களின் மன உறுதியை உயர்த்த உதவும் என்று நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், “கவனமாக இருங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருங்கள்” என்றும் அந்த முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.