சிங்கப்பூரில் முதலை நடமாட்டம்.. வெளியான வீடியோவால் பொதுமக்கள் அச்சம் – உண்மை என்ன?

sungei-buloh crocodile
PHOTO: TikTok/Tiu Vivianbaby Tiu

சிங்கப்பூரில் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது முதலை ஒன்று குறுக்கே வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

சுங்கே பூலோ வெட்லேண்ட் ரிசர்வ் பகுதியில் சென்ற சிலருக்கு அந்த சம்பவம் அப்படியே நடந்துள்ளது.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

குடும்பத்துடன் சென்ற ஆடவர் ஒருவர் இந்த அரிய காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.

டிக்டாக்கில் கடந்த புதன்கிழமை (செப்.27) பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, சிங்கப்பூரில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் சிறுவர், சிறுமியர் நிற்கும் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன, முதலையால் அந்த பகுதியில் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவியது.

ஆனால் அந்த வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று AsiaOne கூறியுள்ளது.

முதலையை கண்டால், அமைதியாக இருக்க வேண்டும், மேலும் மெதுவாக பின் செல்ல வேண்டும். அதனை அணுகவோ, தூண்டவோ அல்லது உணவளிக்கவோ கூடாது.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 6794 1401 என்ற எண்ணில் ரிசர்வ் இன்ஃபர்மேஷன் கவுண்டரை உதவிக்கு அழைக்கலாம்.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு