அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் அதிபர்!

Photo: Wikipedia

வியட்நாம் அதிபர் நூவென் சுவான் ஃபுக் (Nguyen Xuan Phuc, President of the Socialist Republic of Vietnam) மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வரும் பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வருகிறார். வியட்நாம் அதிபருடன் அவரது மனைவியும் சிங்கப்பூர் வருகிறார். அத்துடன், வியட்நாம் நாட்டின் மூத்த அமைச்சர்கள், மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.

விமான பயணிகளின் இருக்கையில் 22 லட்சம் மதிப்புள்ள தங்கம்… விட்டு சென்ற பயணியை தேடும் போலீஸ்

பிப்ரவரி 25- ஆம் தேதி அன்று இஸ்தானாவில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார் வியட்நாம் அதிபர். இஸ்தானாவில் அவருக்கு சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமர் விருந்தளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, வியட்நாம் அதிபர் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையேயான பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

அதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 25- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளக் கூட்டத்தில் பங்கேற்கும் வியட்நாம் அதிபர் சிறப்புரையாற்றுகிறார். பின்னர், பிப்ரவரி 26- ஆம் தேதி அன்று ‘Sembcorp Tengeh’ மிதக்கும் சூரியப் பண்ணையைப் பார்வையிடுவார்.

பொடுபோக்காக சாலையை கடந்த பெண்ணை மோதி தூக்கிய கார்… சாலையில் பறந்து விழுந்த பெண் (வீடியோ)

இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவியதன் 50- வது ஆண்டு நிறைவையும் (50th anniversary of the establishment of diplomatic relations), 2023- ல் மூலோபாய கூட்டாண்மையை நிறுவியதன் 10- வது ஆண்டு நிறைவையும் (10th anniversary of the establishment of the Strategic Partnership in 2023) நினைவுகூரத் தயாராகி வரும் நிலையில், வியட்நாம் அதிபரின் பயணம், வியட்நாமுடனான சிங்கப்பூரின் சிறந்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.