ஈடுகட்டமுடியாத தமிழக ஊழியரின் இழப்பு – துயரில் மூழ்கிய குடும்பத்துக்கு உதவிக்கரம்

family-of-worker-who-died-in-tanjong-pagar-worksite-collapse-to-get-ex-gratia-payout
Photo: Vinoth Kumar/ Instagram

Tanjong Pagar collapsed: தஞ்சோங் பகார் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 20 வயதான வினோத் குமார் என்ற தமிழக ஊழியர் உயிரிழந்தார்.

1 பெர்னாம் ஸ்ட்ரீட்டில் உள்ள Fuji Xerox Towers கட்டிடத்தின் கான்கிரீட் சுவர் பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அவர் மரணித்ததாக சொல்லப்படுகிறது.

யார் இந்த வினோத் குமார்?, சிங்கப்பூர் வந்தது எப்படி?- விரிவாகப் பார்ப்போம்!

இந்நிலையில், அவரின் குடும்பத்திற்கு உதவி செய்ய சில அமைப்புகள் மற்றும் சக ஊழியர்கள் முன்வந்துள்ளன.

மறைந்த ஊழியர் வினோத்தின் குடும்பத்துக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த ஊழியர் மையம் (MWC) ஏற்பாடு செய்துள்ளது.

அவரின் குடும்பத்தின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்வதுதான் முதன்மை நோக்கம் என்று MWC கூறியுள்ளது.

கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியருக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல்!

இதுபோன்ற திடீர் மரணங்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை புரிந்துகொள்வதாக அது கூறியது.

அதேபோல, நெருக்கடியான இந்த சூழலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் உறுதுணையாக இருப்போம் என MWC குறிப்பிட்டுள்ளது.

அதே போல, அவரின் குடும்பத்திற்கு சக தமிழக ஊழியர்களும் உதவி செய்ய முனைப்போடு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அவரின் குடும்பத்துக்கு நேரடியாக உதவி செய்வதே நன்மையாக அமையும் என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

தஞ்சோங் பகார் கட்டிட விபத்து: காணாமல் போன 20 வயதான இந்திய ஊழியர்… 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மரணம்