அலங்கார வண்ண விளக்குகள் ஆண் உறுப்பு போன்று தோற்றமளிப்பதாக பரவிய புகைப்படம் – சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது இல்லை

Viral photo of Christmas lights fake

இரண்டு இலைகளுடன் கூடிய மெழுகுவர்த்தி மற்றும் புனித கனிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் தவறான தோற்றத்தை பிரதிபலிக்கிறது.

சமீபத்தில் இணையத்தில் பரவிய ஆண் பிறப்புறுப்புகளை போன்று தோற்றமளித்ததாக பேசப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்கு அலங்காரங்களின் புகைப்படம் ஆர்ச்சர்ட் சாலையில் எடுக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100

சமூக வலைத்தளங்களில் காணப்பட்ட அந்த புகைப்படம் 2015 இல் பதிவேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் கிரீஸ் நாட்டில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், அது சிங்கப்பூர் அல்ல என்பது உறுதியாக கூறப்பட்டுள்ளது. புகைப்படத்தில் மக்கள் குளிர் கால ஆடைகளை அணிந்துள்ளதை காணமுடிகிறது.

புகைப்படம் திருத்தங்கள் செய்யப்பட்டு ஆர்ச்சர்ட் சாலையில் எடுக்கப்பட்டதாக சொல்லி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதை பலர் நம்பும் வகையிலும் தயார் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆண்டு, ஆர்ச்சர்ட் சாலை கிறிஸ்துமஸ் விளக்குகள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..