மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தென்கொரியா செல்கிறார் சிங்கப்பூர் அதிபர்!

Photo: Singapore President Halimah Yacob Official Facebook Page

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தென்கொரியாவுக்கு வரும் மே 9- ஆம் தேதி செல்கிறார்.

துவாஸ் சோதனைச் சாவடி சம்பவம்: இரு வெளிநாட்டவர்களுக்கு சிறை தண்டனை

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) இன்று (06/05/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்கொரியா நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக் யோலின் (Republic of Korea- ‘ROK’ Yoon Suk-yeol) அழைப்பின் பேரில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் வரும் மே 9- ஆம் தேதி முதல் மே 11- ஆம் தேதி வரை தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

மே 10- ஆம் தேதி நடைபெறும் தென்கொரிய அதிபர் பதவியேற்பு விழாவில் சிங்கப்பூர் அதிபர் கலந்துக் கொள்ளவிருக்கிறார். இந்த விழாவில், மற்ற வெளிநாட்டு தலைவர்களும் கலந்துக் கொள்கின்றனர்.

ஜொகூர் மாநிலத்தின் மிக உயரிய விருதை பெறும் பிரதமர் லீ – சிங்கப்பூரின் “முதல் பிரதமர் லீ குவான் இயூ” வரிசையில் “பிரதமர் லீ”

அதைத் தொடர்ந்து, தென்கொரிய நாட்டின் தலைவர் மூன் ஜே- இன்னை (ROK President Moon Jae-in) சந்திக்கும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டு அதிபர் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். மேலும், சியோலில் சிங்கப்பூர் வர்த்தக நிர்வாகிகள், தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்த தென்கொரிய சுற்றுப்பயணத்தின் போது, சிங்கப்பூர் அதிபருடன் முகமது அப்துல்லா அல்ஹாப்ஷீ (Mohamed Abdullah Alhabshee) மற்றும் இஸ்தானா, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

தேக்கா சென்டரில் சண்டை… இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்

சிங்கப்பூர் அதிபர் இல்லாத நேரத்தில், அதிபரின் ஆலோசகர்கள் குழுவின் தலைவரான எடி தியோ (Eddie Teo, Chairman of the Council of Presidential Advisers), அதிபர் அலுவலகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பார்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.