தங்கும் விடுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் 4 இடங்களுக்குச் செல்ல விசிட் பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா !!

4 day work week

தங்கும் விடுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ஜூன் 24 முதல் சமூகப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிச் சீட்டு பெறத்தேவையில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பிரபலமான நான்கு இடங்களுக்குச் செல்ல விரும்பினால் விசிட் பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது, தங்குமிடங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சமூக பகுதிக்குள் செல்ல விரும்பினால், வெளியேறும் அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

“பிரபலமான இடங்களில் கூட்டத்தை நிர்வகிக்க
• சைனாடவுன்
• கெயிலாங் செராய்
• ஜூரோங் ஈஸ்ட்
• லிட்டில் இந்தியா
ஆகிய நான்கு இடங்களில்
ஒரு புதிய வழிமுறையை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்” என்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

ஒரு ஞாயிறு அல்லது பொது விடுமுறைக்கு மொத்தமாக 80,000 விசிட் பாஸ்கள் கிடைக்கும்.
பகுதிவாரியாக கீழே :
லிட்டில் இந்தியா – 30,000
ஜூரோங் ஈஸ்ட் – 20,000
கெயிலாங் செராய் – 15,000
சைனாடவுனுக்கு – 15,000
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிங்கப்பூரின் பிற இடங்களுக்குச் செல்ல பாஸ் தேவையில்லை.

வாரநாட்கள், சனிக்கிழமைகள் அல்லது பொது விடுமுறையல்லாத நாட்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரபலமான இடங்கள் உட்பட சமூகப் பகுதிகளுக்குச் செல்ல பாஸ் தேவையில்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.