சிங்கப்பூரில் கடற்கரையில் ஆபத்தான ஜெல்லிமீன்கள்; கடலுக்குள் செல்லத் தடை.!

Visitors restricted from entering waters at Siloso beach until further notice after box jellyfish sighting
Photo: Google Maps Street View

சிங்கப்பூரின் சிலோசோ கடற்கரைக்குச் செல்பவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிலோசோ கடல் பகுதியில், மிகுந்த வலியை ஏற்படுத்தும் மற்றும் அபாயகரமான கொடுக்கு போன்ற உறுப்பை கொண்ட பாக்ஸ் ஜெல்லிமீன்கள் (Box jellyfish) காணப்பட்டதாக சென்டோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அதிகாரிகள் சுற்றுக்காவல் பணிகளை அதிகரித்துள்ளதாக CNA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியை தாக்கி காயங்களை ஏற்படுத்திய நபர் கைது..!

பாக்ஸ் ஜெல்லிமீன்கள், கடல் குளவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை கொடுமையான வலியை ஏற்படுத்தும் என்றும், கூடுதலாக மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விஷக் கொடுக்குகளை கொடுள்ளதாகவும் ஆஸ்திரேலிய கடல் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் ஜெல்லிமீன்களைக் காண நேரிட்டால் அவற்றை கையாளக்கூடாது என்றும், அக்கம்பக்கம் உள்ளவர்களை எச்சரிப்பதுடன் கடற்கரையில் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு குறிப்பிட்ட இந்த நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.!

ஜெல்லிமீன் கொட்டினால் தயவுசெய்து பாதிக்கப்பட்ட பகுதியை தேய்க்க வேண்டாம் அல்லது Tentacles எனப்படும் உணர் இழைகளை அகற்ற விரல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முதலுதவியாக கடல்நீர் அல்லது Vinegar-ஐ பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவலாம் என்றும், பின்னர் மருத்துவரை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புலாவ் செரிங்காட் (Pulau Seringat), லசாரஸ் தீவுப் படகுத்துறை, துவாஸ், One Degree 15 Marina Sentosa Cove ஆகிய இடங்களில் ஜெல்லிமீன்கள் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவுநேர கிளினிக்குகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…