VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!

no-visa-free spore india indonesia
(Photo: AFP/Roslan Rahman)

முழு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

அதோடு மட்டுமல்லாமல், 12 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயது குழந்தைகளும் மேலே சொன்ன முறைப்படி சிங்கப்பூருக்குள் வரலாம்.

Breaking: சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்; இந்திய பயணிகள் மகிழ்ச்சி!

புதிய அறிவிப்புகள் என்ன?

தனிமை இல்லா பயணத்தை அனுபவிக்க பயணிகள் நியமிக்கப்பட்ட விமானங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டியதில்லை.

பயணிகள் சிங்கப்பூர் வந்த 24 மணி நேரத்திற்குள் கட்டாயம் எடுக்கும் கோவிட்-19 ART விரைவு சோதனையை இனி எடுக்க வேண்டியதில்லை.

அதே போல முன்னர் குறிப்பிட்ட அளவு வழங்கப்பட்ட quotas ஒதுக்கீடு இனி இருக்காது, தினசரி பயணிகள் அளவு நிர்ணயம் செய்யப்படவில்லை.

Breaking: ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் வேலையிடங்களுக்கு திரும்ப அனுமதி!

முக்கியமாக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதிகள் தேவை இருக்காது.

தற்போதுள்ள VTL திட்டத்துக்கு மாற்றாக, “Vaccinated Travel Framework” எனப் பெயரிடப்பட்ட புதிய பயணத் திட்டம் வரும்.

தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததை போன்ற பயண அனுபவத்தை புதிய எல்லை நடைமுறைகள் கொண்டுவரும் என பிரதமர் திரு லீ கூறினார்.

இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்படும் pre-departure சோதனை முறை நடப்பில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (மார்ச் 24) தெரிவித்துள்ளது.

Breaking: சிங்கப்பூரில் “வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது விருப்பத் தேர்வாக மாறும்” – பிரதமர் லீ!