VTL ஏற்பாடு மூலம் அதிகமான மக்களைப் பயணிக்க அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை..!!

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

சிங்கப்பூர்-மலேசியா இடையே தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணப் ஏற்பாடு (VTL) மூலம் அதிகமான மக்களைப் பயணிக்க அனுமதிப்பது குறித்து இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஆனால், இந்த பயண ஏற்பாடு குறித்த முடிவு இரு நாடுகளிலும் உள்ள COVID-19 சூழலை பொறுத்தது என்று மலேசியாவுக்கான சிங்கப்பூர் உயர் தூதரக அதிகாரி வனு கோபால மேனன் தெரிவித்தார்.

மோசடியில் பாதிக்கப்பட்ட 790 பேருக்கு S$13.7 மில்லியன் தொகையை தானே முன்வந்து செலுத்திய OCBC வங்கி

மேலும், இனி வரவிருக்கும் மாதங்களில் இந்த பயண ஏற்பாட்டுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என நம்புவதாக திரு மேனன் கூறினார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இருநாடுகளும் நவம்பரில் விமான மற்றும் நில வழி VTL பயணங்களை அறிமுகப்படுத்தின.

டிசம்பரில், Omicron பரவல் அச்சத்தின் காரணமாக இரு நாடுகளும் டிசம்பர் 23 மற்றும் ஜனவரி 20 க்கு இடையில் VTL விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனைகளையும் முடக்கின.

அதே போல, ஜனவரி 21 முதல் விமான மற்றும் நில வழி VTLகளில் டிக்கெட் விற்பனை ஒதுக்கீடு 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டது.

சிங்கப்பூர் அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: வெளிநாட்டு பணிப்பெண் உயிரிழந்த சோகம்!