மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நிலவழி VTLகீழ் பயணம் செய்த ஆடவருக்கு கோவிட்-19 தொற்று

Omicron More Infectious Than Delta Variant
Photo Credit: Shin Min Daily News & Mothership

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நில அடிப்படையிலான VTL திட்டத்தின்கீழ் பயணம் செய்த ஆடவருக்கு கடந்த நவம்பர் 30 அன்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

அந்த சீன நாளிதழ் வாசகர் ஒருவரின் உதவியில் இருந்து இந்த சம்பவம் பற்றிய செய்தி வெளியானது.

சிங்கப்பூரில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம்!

மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் சென்ட்ரல் பேருந்து முனையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பேருந்தில் பயணித்த அந்த வாசகர் இதனை பற்றி பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ பணியாளர்கள் தன்னிடம் கூறியதாக உதவிக்குறிப்பை வழங்கிய பெண் கூறினார் என ஷின் மின் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அங்கு தனியாக அமர்ந்திருந்த அவர் திகைப்புடன் காணப்பட்டதாக அவர் கூறினார்.

“அந்த நபரை காத்திருக்கும் இடத்தை விட்டு வெளியேறும் படியும், மற்ற பயணிகளிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தவும் மருத்துவ பணியாளர்கள் சொன்னார்கள் ” என அந்த பெண் கூறியுள்ளார்.

டெலிகிராமை இதற்குமா பயன்படுத்துகிறார்கள்… 50 பேர் அதிரடி கைது!