VTL சேவை: சில மணிநேரங்களில் விற்று தீர்ந்த 40,000 டிக்கெட்டுகள்!

LIANHE ZAOBAO

VTL பயணங்களுக்கான ஒதுக்கீடுகள் வரும் பிப்ரவரி 22 முதல் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர்-மலேசியா இடையே நிலவழி VTL ஏற்பாட்டின்கீழ் சுமார் 40,000 பேருந்து டிக்கெட்டுகள் நேற்றும் (பிப். 16) இன்றும் விற்று தீர்ந்தன.

போக்குவரத்து காவல் அதிகாரியிடம் தன்னுடைய வேலையை காட்டிய வெளிநாட்டு ஊழியர் – தூக்கிய போலீஸ்

அதில் ஒரு பேருந்து நிறுவனம் அடுத்த மாதம் மார்ச் 21ஆம் தேதி வரை உள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று தீர்த்துள்ளது.

சிங்கப்பூரின் டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனம், பிப்ரவரி 22 முதல் மார்ச் 21 வரையிலான கூடுதல் நில நிலவழி VTL டிக்கெட்டுகளை புதன்கிழமை மாலை 6 மணி முதல் விற்பனை செய்யத் தொடங்கியது.

அந்த நிறுவனம் தற்போது உட்லண்ட்ஸ் மற்றும் ஜொகூர் பாருவில் Larkin Sentral இடையே தினமும் 24 VTL பேருந்து சேவைகளை இயக்குகிறது, ஒவ்வொரு திசையிலும் 12 பேருந்துகள் இயங்கும்.

மேலும், வரும் பிப்ரவரி 22 முதல் மொத்தம் 48 சேவைகளாக அது அதிகரிக்கப்படும். ஒவ்வொரு பேருந்திலும் 45 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?