நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றி… கடும் காயம் – 20க்கும் மேற்பட்ட தையல்கள்

wild-boar-attack-zhenghua-park
Image: JL

புக்கிட் பஞ்சாங்கில் உள்ள ஜெங்குவா பார்க்கில் காட்டுப்பன்றி தாக்கியதில் 40 வயது ஆடவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது.

ரொனால்டோ சிங்கப்பூர் வருகை – ரசிகர்கள் ஆரவாரம்

இந்த சம்பவம், நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஜூன் 1) இரவு 8:45 மணியளவில் ஆடவர் தனது நாய்களுடன் நடந்து சென்றபோது ஏற்பட்டுள்ளது.

அவரின் இடது காலில் காட்டுப்பன்றி கடுமையாக கடித்து தாக்கியதாகவும், மீண்டும் தாக்க முற்பட்ட காட்டுப்பன்றியை அவரது நாய்கள் துரத்தி அடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அவர் நேற்று ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக கூறினார்.

இடது காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார், மேலும் அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – ஜூன் முதல் அமல்: மீறினால் 30 ஆண்டுகள் சிறை, 15 பிரம்படி