யுஷுனில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி பிடிபட்டது… பொதுமக்களின் பாதுகாப்புக்கு “கருணைக்கொலை”

Wild boar Yishun caught
Shin Min Daily News and NParks/Facebook

யுஷுனில் பெண் ஒருவரை தரையில் முட்டித்தள்ளிய காட்டுப்பன்றி தேடப்பட்டு வந்த நிலையில் அது நேற்று மார்ச் 20 அன்று பிடிபட்டது.

பின்னர் அந்த காட்டுப்பன்றி “பொது மக்களின் பாதுகாப்புக்காக கருணைக்கொலை செய்யப்பட்டதாக” NParks கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!

முன்னர், யுஷூனில் அமைந்துள்ள திறந்தவெளி பிளாசாவில் பெண் ஒருவரை தாக்கிய இந்த காட்டுப்பன்றியை அதிகாரிகள் தேடி வந்தனர்.

அதாவது கடந்த 12 நாட்களுக்கு முன்பு, மார்ச் 9ஆம் தேதி மாலை 6:40 மணியளவில், Khatib சென்ட்ரலில் உள்ள பிளாக் 846 யுஷுன் ரிங் ரோடுக்கு முன்னால் உள்ள திறந்தவெளி பகுதியில் அந்த காட்டுப்பன்றி பெண்ணை தாக்கியது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறிய தகவலின்படி, காட்டுப்பன்றி மோதியதில் அந்த பெண் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் தரையில் கிடந்தார்.

பின்னர், அவர் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அந்த காட்டுப்பன்றி, நீண்ட தந்தம் கொண்ட ஆண் இனம் என கண்ணால் கண்டவர்கள் கூறியதாக mothership குறிப்பிட்டது. இந்நிலையில், அது கருணை கொலை செய்யப்பட்டது.

பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!