காட்டுப்பன்றிகளுக்கு உணவளித்த 4 பேருக்கு தலா S$2,500 அபராதம் – 19 பேர் மீது குற்றச்சாட்டு

Wild boars feeding fined
(Photo: iStock)

Singapore: லோராங் ஹாலுஸில் (Lorong Halus) காட்டுப்பன்றிகளுக்கு உணவளித்ததற்காக நான்கு பேருக்கு தலா S$2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் வாரங்களில் மொத்தம் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது. கடந்த ஜூன் மாதம் வனவிலங்கு சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து பதிவான மிகப்பெரிய புகார் எண்ணிக்கை இது.

நச்சு கலந்த உணவு காரணமாக 26 பேர் பாதிப்பு – உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து!

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி காட்டுப்பன்றி தாக்குதல் நடந்த பாசீர் ரிஸில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து சில கிலோமீட்டர் அருகில் உள்ள இடத்தில அவர்கள் உணவளித்ததாக தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) தெரிவித்துள்ளது.

ரொட்டி / நாய் உணவு

இதில் 19 நபர்கள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 7 வரை காட்டுப்பன்றிகளுக்கு ரொட்டி அல்லது நாய் உணவைக் கொடுக்கும் போது பிடிபட்டனர்.

சிலர் தனியாக இருந்தனர், மற்றவர்கள் மூன்று பேர் கொண்ட குழுக்களாகக் காணப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகள், வனவிலங்குகளுக்கு உணவளிப்போருக்கு எதிரான தீவிரமான நிலைப்பாட்டைக் குறிப்பதாக NParks கூறியுள்ளது.

வனவிலங்கு சட்டம்

வனவிலங்கு சட்டத்தின்படி, முதல் குற்றத்திற்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவோருக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தங்கும் விடுதி தொற்று: இந்தியாவிலிருந்து வந்த கட்டுமானத் துறை ஊழியருக்கு புதிய பாதிப்பு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…