கப்பலில் இருந்து விழுந்த இந்திய பெண் உயிரிழப்பு – CCTV காட்சிகளை வைத்து உறுதி

Woman died fell cruise son says

சிங்கப்பூர் ஜலசந்தியில் கடந்த திங்கள்கிழமை காலை உல்லாசக் கப்பலில் இருந்து தவறி விழுந்து காணாமல் போன 64 வயதுப் பெண் இறந்துவிட்டதாக அவரின் மகன் கூறியுள்ளார்.

தன்னுடைய தாய் இறந்துவிட்டதை ஏற்றுக்கொண்டதாக அவரின் மகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் புதிய நடைமுறை – 2024 முதல் அமல்

தனது தாயும் தந்தையும் பயணித்த ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பலின் CCTV காட்சிகளை குடும்பத்தினர் பார்த்ததாக திரு விவேக் தனது பதிவில் கூறினார்.

இந்தியா மற்றும் லண்டனில் உள்ள Goila Butter Chicken உணவககத்தின் இணை நிறுவனரான திரு விவேக் தனது பதிவில் கூறியதாவது; “என் தாய் இறந்ததை வீடியோ காட்சிகள் மூலம் பார்த்து தெரிந்துகொண்டோம்” என்று கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த திரு ஜகேஷ் சஹானி, 70, மற்றும் அவரது மனைவி ரீட்டா சஹானி ஆகிய இருவரும் நான்கு நாள் கப்பல் பயணத்தில் இருந்தனர். பின்னர் சிங்கப்பூர் திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரண்டு நாட்களில் மக்கள் காட்டிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்து கொண்டார் திரு விவேக்.

அவரைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்தது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“லாரி பயணத்தை தடை செய்தால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம்” – எச்சரிக்கும் அரசாங்க அமைப்புகள்