SBS பேருந்து கதவு மூடியதில் கீழே விழுந்த பெண் (காணொளி) – ஓட்டுனர் மீது நடவடிக்கை

woman fell SBS Transit bus disciplinary action
Singapore Incidents/Instagram

வயதான பெண்மணி ஒருவர் பேருந்து கதவுகளில் சிக்கி கீழே விழும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

இதனை அடுத்து, அந்த பேருந்து ஓட்டுனருக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை SBS டிரான்சிட் எடுத்துள்ளது.

அந்த பெண்மணி இறங்கும்போது பேருந்தின் கதவுகள் மூடப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து அவர் பின்னோக்கி விழுவதை காணொளியில் காணமுடிகிறது.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்

இந்த சம்பவம் ஹௌகாங் (Hougang) பேருந்து முனையத்தில் நடந்துள்ளது.

“ஓட்டுனரின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், அவரது “அணுகுமுறையை நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணிக்கும்” என்றும் SBS டிரான்சிட்-இன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மூத்த துணைத் தலைவரான திருமதி டம்மி டான் கூறினார்.

மேலும், அந்தப் பெண்மணி பலத்த காயமடையவில்லை என்றும், வெளிநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் அவர் கூறினார்.

கவனிப்பு மற்றும் அக்கறையை காட்டும் விதமாக அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக கூறிய அவர், மேலும் தேவையான உதவியையும் வழங்கியுள்ளதாக கூறினார்.

எகிறிய விமான முன்பதிவுகள் – வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு