அடுக்குமாடி ஜன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி… பதைபதைக்கும் காட்சி – கைது செய்த போலீஸ்

Stomp

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64 பிளாக் 662B இல் உள்ள அடுக்குமாடி வீட்டு ஜன்னல் விளிம்பில் ஆபத்தான முறையில் நின்றுகொண்டிருந்த 71 வயது மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 2.50 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக தெரிவித்தனர்.

“இது என்ன உங்க தாத்தா வீட்டு சாலையா?” – சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான பதாகைகள்!

அதன் பின்னர், காவல்துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது ​​அந்த மூதாட்டி அடுக்குமாடி வீட்டு ஜன்னல் விளிம்பின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் அந்தப் பெண் பாதுகாப்பாக கீழே அழைத்து வரப்பட்டு, மனநல சிகிச்சைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார் என்று காவல்துறை கூறியது.

அவர் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஸ்டாம்பிடம் SCDF கூறியது.

இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நெஞ்சை உலுக்கும் காட்சிகளை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் குவியும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் – ICA கூறிய தகவல் என்ன ?