அடுக்குமாடி வீட்டின் ஜன்னல் வழி தொங்கிய பெண் – MOM வெளியிட்ட உறுதி தகவல்

woman-yishun-not-domestic-worker
Internet

சமீபத்தில் யுஷூன் அடுக்குமாடி வீட்டின் ஜன்னல் வழியில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததாக தகவல் வெளியானது.

துணி ரேக்கில் ஆடையின்றி தொங்கிய அந்த பெண் யார் என்பது பற்றிய ஊகங்களைத் தவிர்க்குமாறு மனிதவள அமைச்சகம் (MOM) பொதுமக்களை வலியுறுத்துகிறது.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

இந்த சம்பவம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் காணொளிகள் வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதோடு அந்தப் பெண் வெளிநாட்டு பணிப்பெண் என்ற வதந்தியும் இருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

அது உண்மை இல்லை என்றும் இறந்தவர் வெளிநாட்டு பணிப்பெண் அல்ல என்றும் MOM குறிப்பிட்டது. மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக அது கூறியது.

கடந்த அக்.12 அன்று, பிளாக் 874 யுஷூன் ஸ்ட்ரீட் 81 இன் 11 வது மாடியில் உள்ள வீட்டுக்கு வெளியே அந்தப் பெண் தனது துணி ரேக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

ஆடையின்றி தொங்கிய அவர், அதையடுத்து கீழே விழுந்து மரணித்ததாக அது கூறியது.

இதனை அடுத்து அந்தப் பெண் பிலிப்பைன்ஸிலிருந்து வந்த வெளிநாட்டு பணிப்பெண் என்று வதந்தியான செய்திகள் பரவின.

பின்னர் அந்த பெண் 11வது மாடியில் வசித்து வந்த சிங்கப்பூர் நாட்டவர் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தது, அவர்கள் 47 வயதான அந்த பெண்ணை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவின்றி இருந்த அவர், பின்னர் உயிரிழந்தார்.

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்