டிச.26 முதல் உட்லண்ட்ஸ் பேருந்து சேவைகளின் வழித்தடங்கள் மீண்டும் துவங்குதல்!

Photo: SMRT

‘SMRT’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ‘டிச.26 முதல் உட்லண்ட்ஸ் பேருந்து சேவைகளின் வழித்தடங்கள் மீண்டும் துவங்குதல்’ என்ற தலைப்பில் நேற்று (23/12/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சாலைப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், 26 டிசம்பர் 2021 முதல், உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவத்தில், எண்கள் 161, 168, 858, 962, 964, 969 ஆகிய பேருந்து சேவைகள் மீண்டும் செயல்படத் துவங்கும்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்: புக்கிட் திமா ஷாப்பிங் சென்டரில் உள்ள ‘Anytime Fitness’ ஜிம்மை 10 நாட்களுக்கு மூட உத்தரவு!

169, 900 / 900A, 901 / 901M, 903 / 903M, 904, 911, 912 / 912A, 913 ஆகிய பேருந்து சேவைகள், உட்லண்ட்ஸ் அவென்யூ 2/7 வழியாக, உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவத்திற்கு அவற்றின் அசல் தடத்திலேயே மீண்டும் துவங்கும்.

Buangkokகில் ஆயுத்தை கொண்டு சண்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது

2021 டிசம்பர் 12 முதல் 25- ஆம் தேதி வரை தற்காலிகமாக வழித்தடத்தில் மாற்றம் செய்ததை நீங்கள் புரிந்துக் கொண்டதை நாங்கள் பாராட்டுகிறோம். மேல் விபரங்களுக்கு SMRT-யின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் 1800-336-8900 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.