கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்: புக்கிட் திமா ஷாப்பிங் சென்டரில் உள்ள ‘Anytime Fitness’ ஜிம்மை 10 நாட்களுக்கு மூட உத்தரவு!

Photo: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் ‘ஓமிக்ரான்’ வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை அமைச்சகம், நோய்த்தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், பயண போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்திக் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தாயகம் திரும்ப மலேசியர்கள் ஆர்வம்: விற்றுத் தீர்ந்த ஜனவரி மாத இறுதி 10 நாள் பேருந்து டிக்கெட்டுகள்!

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள ‘புக்கிட் திமா ஷாப்பிங்’ சென்டரில் (Bukit Timah Shopping Centre) இயங்கி வரும் ‘Anytime Fitness’ என்ற ஜிம்மில் ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் (Sports Singapore) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், அரசின் கொரோனா பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை (Covid- 19 Safe Management Measures- ‘SMMs’) முறையாகக் கடைப்பிடிக்காமல் ஜிம் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஜிம்மை மூட உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 1,000 சிங்கப்பூர் டாலரை அபராதமாக விதித்துள்ளது.

இது குறித்து ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் (Sports Singapore) கூறுகையில், “சிங்கப்பூரின் முதல் ‘ஓமிக்ரான்’ நோய்த்தொற்று குழுமம் இந்த ‘Anytime Fitness’ என்ற ஜிம்மில்தான் உருவாகியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாங்கள் ஜிம்மில் சோதனை மேற்கொண்டோம். இதில், அரசின் கொரோனா பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை. ஜிம்மிற்கு வரும் வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை மீறியுள்ளன. இதனால் ‘புக்கிட் திமா ஷாப்பிங்’ சென்டரில் இயங்கி வரும் ‘Anytime Fitness’ என்ற ஜிம்மை டிசம்பர் 22- ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

VTL விமானம் மூலம் சிங்கப்பூர் வந்த 53 பேருக்கு “Omicron” பாதிப்பு

சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry of Health- ‘MOH’) கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் இந்த ஜிம்முடன் தொடர்புடையவர்கள். இதில் இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ‘ஓமிக்ரான்’ பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்த மூன்று பேர் டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளுக்கு இடையில் புக்கிட் ‘திமா ஷாப்பிங்’ சென்டரில் உள்ள இந்த ஜிம்முக்கு வந்து சென்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து உள்விளையாட்டு கூடங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களின் நிர்வாகங்கள், அங்கு சென்று பயிற்சிப் பெறுபவர்கள் கட்டாயம் அரசின் கொரோனா பாதுகாப்பு மேலாண்மை நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு மேலாண்மை நடைமுறைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிப்பெண்ணுடன் அறையில் ஒன்றாக இருந்த வெளிநாட்டு ஊழியர்: கையும் களவுமாக பிடித்த முதலாளி – போலீசில் புகார்

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் மீண்டும் கொண்டு வர, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துறையுடன் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் நெருக்கமாக பணியாற்றும்” எனத் தெரிவித்துள்ளது.