பாதுகாப்பு விதிமுறை மீறல்… work pass அனுமதி ரத்து – சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை!

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் கிருமித்தொற்று தொடர்பான பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக பிரிட்டிஷ் பெண் ஒருவருக்கு சிங்கப்பூரில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லசாரஸ் தீவின் கடற்பகுதியில் பத்து நபர்கள் படகில் இருந்துள்ளனர், அதில் ஒருவர் 28 வயதான ஏமி கிரேஸ் ரொப்னேர் என்ற பெண்.

COVID-19 தடுப்பூசி: எல்லை கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படலாம்!

அப்போது 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த படகில் இருந்த யாரும் முகக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் work pass அனுமதியை முன்னரே ரத்து செய்துவிட்டதாக மனிதவள அமைச்சகம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

மேலும், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கையை மீறியதாக ரொப்னேர் மற்றும் இன்னொருவருக்கும் தலா S$3000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சாம்பியனாக துடிக்கும் இந்திய ஊழியர்.. அதிக வேலை நேரத்தின் மத்தியிலும் உடற்பயிற்சி!