Work pass ஊழியர்கள் அல்லது குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க யோசிக்கும் நிறுவனங்கள்!

Photo: Getty

Work pass அனுமதி வைத்திருக்கும் ஊழியர்களை பற்றி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.

சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக Work pass அனுமதி வைத்திருப்பவர்களை எத்தனை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கவில்லை என்று MP லூயிஸ் கேட்டிருந்தார்.

சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இறுதியாக அனுமதி – மகிழ்ச்சி

ஆண்டுதோறும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் ஆண்டுதோறும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் சதவீதம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், தோராயமாக 160,000 வணிக நிறுவனங்கள் உள்ளன என்று அமைச்சர் டான் பதிலளித்தார்.

அவை நிறுவனங்கள், கூட்டாண்மை மற்றும் தனி நபர் வணிகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அவை குறைந்தபட்சம் ஒரு ஊழியரை வேலைக்கு அமர்த்தியுள்ளன.

இந்த வணிக நிறுவனங்களில், 45% முதல் 48% வரையிலானவை Work pass ஊழியர்களை பணியமர்த்தவில்லை அல்லது குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை பணியமர்த்தவில்லை.

கட்டிட பராமரிப்பு பணியின்போது 16வது மாடியில் இருந்து 9வது மாடிக்கு விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்